120-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோக்களை தயாரித்த அமர்புரி என்கிற ஜலேபி பாபா குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் தோஹானாவில் உள்ள பாபா பாலக்நாத் கோவிலின் பூசாரி ஜலேபி பாபா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய சோதனையில் அவர் எடுத்த பல ஆபாச வீடியோக்கள் சிக்கியது.
காவல்துறை கூற்றுப்படி, ஜலேபி பாபா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு போதைப்பொருள் கொடுத்த அவர்களை வசீகரம் செய்ததாக கூறியுள்ளனர். பெண்களிடம் உங்களுக்கு ஆவிகள் பிடித்திருப்பதாகச் சொல்லி வந்துள்ளார். பயத்தின் காரணமாக, அவர்கள் அவரது சூனிய நடவடிக்கைகளில் விருப்பத்துடன் கலந்து கொண்டனர். தந்திர வித்யா சடங்குகளின் போது, அவர் அவர்களை மயக்கமடையச் செய்து.

பின்னர் அவர்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் வசூலித்து வந்தது விசாரணையில் அம்பலமானது. அதுமட்டுமின்றி, வீடியோக்களை வைத்து, தன்னுடன் உடல் உறவில் ஈடுபடும்படி பாதிக்கப்பட்ட பெண்களை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
அவரது அறையில் இருந்து 120 ஆபாச வீடியோக்கள்
ஜலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டார். பலாத்காரம், ஐடி சட்டம், மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். சோதனையில், அவர் வெவ்வேறு பெண்களுடன் உடலுறவு வைத்த 120-க்கும் மேற்பட்ட வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். சோதனையின் போது அவரது அறையில் இருந்து போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர்.