fbpx

விவசாயிகளுக்கு ரூ.41 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதா?. இம்முறையாவது பட்ஜெட்டில் இலக்கை எட்டுமா வேளாண்துறை?

Farmers: விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41,000 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியிருந்தார். இருப்பினும், வேளாண்துறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாமல் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. அதனால் இந்தமுறையாவது பட்ஜெட்டில் திட்டங்களால் அவை இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டம், பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும். மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 4 வரை நடக்கும். நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.41,000 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய முடிவுகள் வேகமாக அரசால் நிறைவேற்றப்படுகின்றன எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். ஆனால் இதுவரை அந்த இலக்குகளை விவசாயத்துறை எட்டியதில்லை. உலக நாடுகளின் பொருளாதார வரிசையில் இந்தியா 5வது இடத்தில் இருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் ஜிடிபி வளர்ச்சி தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 2022-2023ல் 9 சதவிகிதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி, 2024-2025ல் 6% ஆக குறைந்திருக்கிறது. இந்த குறைவுக்கு முக்கிய காரணமாக வேளாண் துறையில் ஏற்பட்ட பின்னடைவுதான்.

அதெப்படி ஜிடிபிக்கும் இந்தியாவின் வேளாண் துறைக்கும் சம்பந்தம் இருக்கும் என்றால், அதுதான் நாட்டின் முதுகெலும்பே, விவசாயத்தில் லாபம் பார்த்தால்தானே இந்திய பொருளாதார வளர்ச்சி முன்னேறும். அதனால் முதலில் வேளாண் துறைக்கு போதிய வசதிகள் செய்ய போதுமான நிதியுதவி அளிக்கப்பட்டு, அதை உடனுக்குடன் செயல்படுத்தவும் வேண்டும்.

அதென்ன வசதிகள் என்றால், சேமிப்பு கிடங்குகள், பருவ நிலைக்கு ஏற்ப பாதுகாப்பாக பயிரிடுதல் போன்ற முக்கிய வழிகாட்டுதல்கள் அரசு கண்காணித்து உரிய வசதிகளை செய்ய வேண்டும், பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் விவசாய நிலைகளை சரி செய்யவும் அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். இப்படி செய்தால்தான் நம் நாட்டின் ஜிடிபி உயரும்.

கடந்த 2023-2024 நிதியாண்டில் இந்த துறைக்கு என 60 திட்ட பணிகள் (Project plans) அறிவிக்கப்பட்டன. ஆனால் இதில் 45 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2024-2025ல் 100 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் வெறும் 17 திட்டங்கள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. காரணம் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும், ஆக்கபூர்வமாகவும் செலவழிக்காததுதான். இந்த முறையாவது அரசு சரியான திட்டங்களுடன் வேளாண் துறைக்கு கூடுதல் கவனம் செலுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Readmore: பெண்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகும் பட்ஜெட்!. சிறப்பு முதலீட்டு திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு!.

English Summary

Has Rs. 41 thousand crore been provided to farmers? Will the agriculture sector achieve the budget target at least this time?

Kokila

Next Post

சூப்பர் அறிவிப்பு... மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Sat Feb 1 , 2025
Students can apply online for scholarships.

You May Like