fbpx

மத்திய அரசு வழங்கிய ரூ.2,000 பணம் வரவில்லையா…? உடனே இதை செய்து விடுங்கள்…!

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை பிஎம் கிசான் திட்டத்தின் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் 12-வது தவணை நிதியை பிரதமர் நேற்று விடுவித்தார். இந்த தொகை விவசாய பயனாளி குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் “பிரதம மந்திரி கிசான் சம்மன்” நிதி 12-வது தவணைத் தொகையைப் பெறவில்லை அல்லது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், 155261, 011-24300606, 011-23381092 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Vignesh

Next Post

மக்களே கவனம்... ஆவின் இனிப்பு பொருளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி டால்டாவா...? வெளியான புதிய விளக்கம்...

Wed Oct 19 , 2022
ஆவின் இனிப்பு தயாரிப்புகளில் டால்டாவை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆவின் நிறுவனம், பால் உப பொருட்களான பால்கோவா, மைசூர்பாக்கு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், பன்னீர், தயிர், […]

You May Like