fbpx

பிரதமரின் ரூ.2,000 பணம் வரவில்லையா..? உங்கள் பெயரை லிஸ்ட்டில் இருந்து தூக்கியதே தமிழக அரசு தான்..!! பரபரப்பு தகவல்..!!

பிஎம் கிசான் குறித்து, மிகப்பெரிய எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் நிலவி வருகிறது. இதற்காக வரப்போகும் பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிஎம் கிசான் குறித்து அண்ணாமலை, மிக முக்கியமான கேள்வியை திமுக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்.

பிஎம் கிசான் என்று சொல்லப்படும் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டமானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசு மீது முக்கிய குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஎம் கிசான் திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் இருப்பவர்கள், வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, விவசாயிகள் அனைவரையும் சேர்க்கலாம் என்று மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் இப்போது 21 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தில் தற்போது நிதி பெறுகிறார்கள். மத்திய அரசின் மீது விவசாயிகள் அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். எனவே, இதனை கண்டித்து திருச்சி தொடங்கி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று அறிவித்துள்ளார்.

Read More : ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! இனி ரொம்ப ஈசி..!! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

Annamalai has raised a very important question to the DMK government regarding PM Kisan.

Chella

Next Post

"சண்டாளர்" என்கிற பெயரை பயன்படுத்த தடை..!! வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!

Mon Jul 15 , 2024
The use of the name "Sandala" is prohibited.

You May Like