fbpx

பிரதமருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்ட்…!

இன்று மாலை தமிழகம் வரும் அவருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்கிறார். இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை வரும் மோடி, தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

அதே போல திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.வி.பால கணபதி, ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஒரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சி சார்பில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை தமிழகம் வரும் அவருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது. ஆளும் கட்சியான பாஜக மோடிக்கு ஆதரவாக என்ன இந்த முறை என்ன ஹேஷ்டேக் செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Vignesh

Next Post

சுயநினைவோடு இருக்கிறாரா கமல்?… மூளையை பரிசோதிக்க வேண்டும்!… அண்ணாமலை விமர்சனம்!

Tue Apr 9 , 2024
Annamalai: இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும் என்று கூறிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடசென்னையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவின் தலைநகர், ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூருக்கு மாற்றப்படும் என்று அச்சம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் […]

You May Like