fbpx

’என்னை ஒதுக்கிவிட்டார்களா’..? ’எனக்கு பல வாய்ப்புகள் உள்ளது’..!! காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பரபரப்பு பேட்டி..!!

காங்கிரஸ், என்னை ஒதுக்கினால் எனக்கு செல்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளதாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூருக்கும், கட்சியின் தலைமைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், திருவனந்தபுரம் எம்.பி. எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கட்சி தனது பங்களிப்புகளை இனி மதிக்கவில்லை என்றால், அவருக்கு வேறு வழிகள் உள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய சசிதரூர், “காங்கிரஸ், என்னை ஒதுக்கினால் எனக்கு செல்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. பல இடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”நான் ஒரு அரசியல்வாதியைப் போல நினைக்கவில்லை. எனக்கு எப்போதும் குறுகிய அரசியல் சிந்தனைகள் இருந்ததில்லை. கருத்து தெரிவிப்பதற்கு முன்பு வரும் சங்கடங்கள், அதனால் வரும் பிரச்சனைகள் குறித்து நான் யோசித்தது இல்லை. ஒரு அரசு மக்களுக்கு நல்லது செய்யும்போது பாராட்டுகிறார்கள். தவறான நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்கள். அந்த வகையில், என்னுடைய கருத்துக்கு மக்களிடம் இருந்து எதிர்மறையான எதிர்வினையை ஒருபோதும் பார்த்ததில்லை.

அதேபோல், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது குறித்து தான் பரிசீலித்து வருவதாக பரவி வரும் வதந்திகள் உண்மையல்ல. சில விஷயங்களில் ஒருவர் உடன்படவில்லை என்றால் கட்சி மாறுவதில் தான் நம்பிக்கை இல்லை. அது சரியாகவும் இருக்காது. காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் நீங்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தீர்களா? என்ற கேள்விக்கு, செயற்குழு என்பது 100 பேர் கொண்ட ஒரு அமைப்பாகும். நான் அனைத்து அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் எந்த பிரத்யேக முடிவையும் எடுத்து நான் பார்த்ததில்லை. காங்கிரஸ் செயற்குழு கூட்டங்கள் முன்பு போல தற்போது நடப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Read More : மாநகராட்சி அதிகாரியை பொளந்து கட்டிய மனைவி..!! பாத்ரூமுக்குள் பதுங்கிய இளம்பெண்..!! பின்தொடர்ந்து வந்த குடும்பம்..!!

English Summary

Shashi Tharoor has said that if Congress rejects him, he has many options to leave.

Chella

Next Post

இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள்..!! சினிமா டூ அரசியல் வாழ்க்கை ஒரு பார்வை..

Mon Feb 24 , 2025
Iron Lady Jayalalitha's 77th Birthday..!!

You May Like