கல்லூரிகளில் படித்து வரும் பாட்டியலின மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவி தொகையை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கடந்த மே மாதம் 31 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமான இணையதளமான tndtwscolarship.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருப்பதால் மாணவ, மாணவிகள் உடனடியாக அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.