தமிழகத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. அந்த பொதுத்துறை வங்கிகளில் அவ்வப்போது காலி பணியிடங்கள் ஏற்படும்போது அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி நிர்வாகம் வெளியிடும்.
அந்த வகையில், தற்போது பல்வேறு அரசு சார்ந்த வங்கிகளில் காலியாக இருக்கின்ற சுமார் 1402 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ பி பி எஸ் வெளியிட்டு இருக்கிறது.
பணியிடங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து பொறியியல் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டணம் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 175 ரூபாய் மற்றும் மற்றவர்களுக்கு 850 தேர்வு கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். அதோடு, விண்ணப்பதாரர்கள் 650 CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவதற்கு www.ibps.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.