fbpx

’மறந்துட்டீங்களா’..!! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான 3ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், இந்த முறை அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று (ஜனவரி 6) நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

’மறந்துட்டீங்களா’..!! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

கல்விச்சாற்றல் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர வேண்டும் என்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Leave: இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை? உங்க மாநிலமும் இருக்கா? முழு விவரம்..

Fri Jan 6 , 2023
இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருவதால், நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் குளிர்காலத்தில் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பள்ளி நேரத்தை மாற்றியுள்ளன. மாநிலங்களில் குளிர்கால விடுமுறை பெரும்பாலும் ஜனவரி நடுப்பகுதி வரை இருக்கும், ஆனால் கடுமையான குளிர்கால நிலை நீடித்தால் நீட்டிக்கப்படலாம். எந்தெந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பாப்போம். டெல்லி: குளிர்கால விடுமுறைக்காக தலைநகர் டெல்லியில் […]

You May Like