fbpx

நீண்ட நாட்களாகவே உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா..? அப்படினா கேன்சர் வரும் அபாயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

மனித உடலில் ரத்தம் ஒரு இன்றியமையாததாகும். இரத்தத்தின் சிவப்பு செல்களில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த செல்களில் ஏற்படும் குறைபாடு இரத்த சோகை என அழைக்கப்படுகிறது. இந்த ரத்த சோகை குறைபாடை நாளடைவில் கவனிக்காமல் விட்டால் அது புற்றுநோயை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரத்த சோகை என்பது ஒரு நோய் அல்ல அது மற்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதன் கட்டிகளில் இருந்து வெளிப்படும் ரத்தத்தினால் பெருமளவில் ரத்த இழப்பு ஏற்பட்டு இரத்த சோகை ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரத்த சோகையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் அது புற்றுநோய், இதய செயலிழப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். பொதுவாக கேன்சர் செல்கள் நம் உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களை தாக்கி அளிப்பதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் நாள் பட்ட ரத்த சோக, இரத்தப் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

தொண்டை புற்று நோய் ஏற்படுவதற்குரிய முதல் அறிகுறியாக இருப்பது இரும்புச்சத்தில் ஏற்படும் குறைபாடாகும். பெரிய அளவில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளில் மெதுவாக ஏற்படும் ரத்த இழப்பு நோயாளிக்கு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. எனவே இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.

Read More : தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஜாக்பாட்..!! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு..!! இனி எவ்வளவு தெரியுமா..?

English Summary

The first sign of throat cancer is iron deficiency.

Chella

Next Post

என்னது கோடை வெயிலுக்கு கூல் ட்ரிங்க்ஸா..? ஒரு பிரயோஜனமும் இல்ல..!! இதை குடிங்க போதும்..!! காரணம் சொல்லும் பிரபல மருத்துவர் அருண்குமார்..!!

Sat Mar 29 , 2025
Renowned doctor Arun Kumar shared important information about the foods we should eat during summer.

You May Like