fbpx

ஆன்லைனில் எதாவது தனி விவரங்களை வைத்துள்ளீர்களா?… கூகுள் மூலம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!… புதிய அம்சம் அறிமுகம்!

கூகுளில் வரவிருக்கும் புதிய அம்சம் மூலமாக, இணையத்தில் நம்முடைய தனி விவரங்கள் இருந்தால் அதை கண்டுபிடித்து நீக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகையில், கூகுள் தளத்திலேயே நமது தனி விவரங்களை கையாளுவதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் இணையத்தில் நம்முடைய தனி விவரங்கள் இருந்தால் அதை நாமே கூகுளில் தேடிப்பார்த்து நீக்க முடியும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணையதளம் மற்றும் மொபைல் வசதிகளில் Result About You என்ற பகுதி சேர்க்கப்பட்டது. இந்த டேஷ்போர்ட்டில் உங்களின் தனி விவரங்களை உள்ளீடு செய்தால், அதேபோன்று விவரங்கள் வேறு ஏதாவது வலைதளத்தில் இருந்தால் அதை தானாகவே இந்த அம்சம் கண்டுபிடித்துக் கொடுத்துவிடும். மேலும் உங்களுடைய தகவல்களை சரி பார்த்து அந்தத் தகவல்களை நீக்குவதற்கான கோரிக்கையை இணையத்திலேயே வைக்க முடியும்.

இதற்கு முன்னதாக தங்களின் தனி விவரங்களை தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாகவே பயனர்கள் அணுகி வந்தனர். அதன் பின்னர் அதை நீக்குவதற்கான கோரிக்கையை தனியாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது வந்திருக்கும் புதிய அம்சத்தில் அனைத்துமே கூகுளிலேயே கண்டுபிடித்து அங்கேயே உங்கள் விருப்பத்தின் பேரிலேயே நீக்கிவிடலாம். உங்களுடைய தனி விவரங்களை கூகுள் வாயிலாக மற்ற வலைதளங்களில் இருந்து நீக்குவதன் மூலம், ஒட்டுமொத்தமாக அது எல்லா இணையதளங்களில் இருந்தும் நீங்கிவிடும். மேலும் அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் இணையதளங்களில் இருக்கும் நம்முடைய விவரங்களை கூகுள் நிறுவனத்தால் நீக்க முடியாது. தற்போது இந்த புதிய வசதியை கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. மற்ற நாடுகளிலும் மற்ற மொழிகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் வசதி!… எப்படி யூஸ் பண்றது?… முழு விவரம் இதோ!

Tue Aug 29 , 2023
வாட்ஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது அதில் உள்ள சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் செய்யும் பொழுது பயனர்கள் தங்களது போன் ஸ்கிரீனை ஷேர் செய்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை பயன்படுத்தி ஹோஸ்ட் தனது போன் ஸ்கிரீனில் தெரியக்கூடிய விஷயங்களை பிறருக்கு ஷேர் செய்யலாம். இது அலுவலக மீட்டிங் மற்றும் பிற விஷயங்களுக்கு ஒரு பயனுள்ள கருவியாக […]

You May Like