fbpx

இந்த வங்கியில் கடன் வாங்கியிருக்கீங்களா..? என்னங்க இப்படி ஆகிப்போச்சு..!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக ஹெச்.டி.எஃப்சி. வங்கி உள்ளது. இந்த வங்கி ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஹெச்.டி.எஃப்சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது, அனைத்து வகையான கடன்களுக்கான மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (MCLR) 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடனுக்கான இ.எம்.ஐ. சுமையாக மாறும். ஒரே இரவில் MCLR 8.35 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாகவும், ஒரு மாத கடனுக்கான வட்டி 8.55 சதவீதமாகவும், மூன்று மாதங்களுக்கு 8.80 சதவீதமாகவும், 6 மாதங்களுக்கு 9.05 சதவீதமாகவும், ஓராண்டுக்கு 9.15 சதவீதமாகவும் அதிகரித்து ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.

Chella

Next Post

ஜி 20 மாநாட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலா அதிர்ச்சியான காவல் துறையினர்…! பரபரப்பான டெல்லி நடந்த உண்மை என்ன விவரம் உள்ளே….!

Sat Sep 9 , 2023
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் ஜி.20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல் முறையாக இந்தியா தலைமை தாங்குகிறது. இது உலக அரங்கில் இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளது. டெல்லியில், பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற பாரத் மண்டபத்தில் பதினெட்டாவது ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உலக […]

You May Like