fbpx

தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி…! மத்திய அமைச்சர் தகவல்‌‌…

சென்னை – அந்தமான் இடையே கண்ணாடி இழை தொலைபேசி & இண்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

போர்ட் பிளேரின் மினிவேயில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன் , ஜன்தன் கணக்கு தொடங்க வைத்தது இந்த அரசின் முதல் சீர்திருத்தம் என்றார். 100% மண்ணெண்ணெய் பயன்பாடில்லா மாநிலமாக அந்தமான் திகழ்கிறது. 100% எல்இடி மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை – அந்தமான் இடையே கண்ணாடி இழை தொலைபேசி & இண்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஹாவ்லாக், கார் நிக்கோபார் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்பங்களைக் கட்டமைக்கும் பணி விரைவில் முடிவு பெற்று பயன்பாட்டுக்கு வரும். இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் முருகன் கூறினார். போர்ட் ப்ளேரில் தூர்தர்ஷனில் செய்திப் பிரிவு தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

Vignesh

Next Post

கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் உணவுகள் இவை தான்.. தவிர்க்கவில்லை எனில் மாரடைப்பு வரலாம்...

Fri Sep 16 , 2022
இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பிரச்சனை உள்ளது. இது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக, இதய நோய்கள் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கொலஸ்ட்ராலை அதிகரிக்க பல விஷயங்கள் காரணமாகின்றன. கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.. எண்ணெயில் பொரித்த பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எண்ணெய் பொருட்கள் […]

You May Like