fbpx

ஆதார் மற்றும் பான் நம்பரை இதுவரையில் இணைக்கவில்லையா……? உங்கள் தான் அட்டை செயலிழந்து விட்டால் கவலை வேண்டாம் இதோ உங்களுக்கான ஒரு புதிய வழிமுறை இதை உடனே செய்யுங்கள்…..!

ஆதார் நம்பர் உடன் இணைக்காமல் போனதால் பான் அட்டை செயலிழந்து விட்டது என்று பலர் கவலையில் இருப்பார்கள். அவர்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது நாம் காணலாம்.

ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பதற்கு மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்ட காலக்கெடு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி உடன் முடிவுக்கு வந்தது இதற்கான கால நீட்டிப்பை ஏற்கனவே பலமுறை மத்திய அரசு நீட்டித்திருந்த நிலையில், இந்த முறை இந்த காலவரையறை நீட்டிப்பு குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆகவே ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத வான் அட்டைகள் அனைத்தும் தற்போது மெல்ல, மெல்ல செயலிழக்க தொடங்கி இருக்கின்றனர்.

அப்படி பான் அட்டை செயலிழக்க தொடங்கியிருந்தால் அதன் காரணமாக, பாதிப்பை சந்திப்போர் நிச்சயமாக பான் எண் தேவைப்படும் குறிப்பிட்ட சேவைகளை அந்த தனி நபர்களால் பெற முடியாது. அத்துடன் தனிநபர் யாராவது இதுவரையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்கள் தங்களுடைய பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்த பிறகு தான் வருமான வரி கணக்கை கூட தாக்கல் செய்ய இயலும் வருமான வரியின் ரிட்டன்ஸ் ஐ கூட பெற முடியாது என்று கூறப்படுகிறது. அதிகப்படியான வரிகளும் பிடித்தம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பான் அட்டைகள் செயலிழக்க தொடங்கியிருந்தால் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து எந்த விதமான அறிவிப்பும் மத்திய அரசு இதுவரையில் வெளியிடாத நிலையில் பொதுமக்கள் தங்களது pan என்னை மறுபடியும் செயல்படுத்த அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சென்ற மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தனி நபர்கள் தங்களுடைய பான் அட்டை செயலிழந்தால் அதை மறுபடியும் எப்படி செயல்பட செய்யலாம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவுபடுத்தி இருக்கிறது. அதன்படி ஆதார் மற்றும் பான் அட்டை இணைப்பதற்கு 1000 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் அதற்கு உரிய அதிகாரிகளை சந்தித்து தகவல்கள் கூறினால் 30 நாட்களுக்குப் பிறகு பயனர்களின் பான் அட்டை மறுபடியும் பயன்பாட்டிற்கு வந்து விடுமாம்.

வருமான வரி ஈ ஃபைலிங் இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்களுடைய கணக்கில் லாகின் செய்து உள்நுழைய வேண்டும். அதன் பிறகு link pan with aadhaar விருப்பத்தை தேடி அதனை கிளிக் செய்ய வேண்டும், படிவத்தில் கேட்கப்படும் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும் அதன் பிறகு ஈ பே டேக்ஸ் மூலமாக பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க வேண்டும்.

Pan/Tan மற்றும் confirme PAN/TAN நீண்ட வரிசைகளின் கீழ் பான் எண்ணை உள்ளிட்டு, உங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிட்டு தொடர வேண்டும் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு தொடரவும் என்பதை கிளிக் செய்து 2023-24 மதிப்பீட்டு வருடமாகவும் மற்ற ரசீதுகளை 500 பேமெண்ட் வகையாகவும் தேர்வு செய்ய வேண்டும்.others விருப்பத்திற்கு எதிராக தொகை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும். அதனால் தொடரவும் என்ற பட்டனை கிளிக் செய்து பணம் செலுத்தலாம்.

Next Post

நீங்கள் ரயில் பயணத்தை விரும்புபவரா அப்படி என்றால் இனி வெளியூர் சென்றால் தங்குவதற்கு அறை தேடி அலைய வேண்டாம்…..! ரயில்வே துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா மகிழ்ச்சியில் பயணிகள்…..!

Mon Jul 3 , 2023
ஐ ஆர் சி டி சி ஓய்வு அரை முன்பதிவு இந்திய ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்குகிறது இதன் காரணமாக பொதுமக்களின் பயணம் சுகமாக இருக்கிறது. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதோடு பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மற்ற வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ரயில்வேயின் பல வசதிகள் தொடர்பாக பயணிகளுக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு வசதி பற்றி தற்போது […]

You May Like