காதலித்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் சத்தியசீலன் (22) வீட்டுக்கு வீடு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரும் 17 வயது சிறுமி ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இருவரும் உல்லாசமாக இருந்ததை சத்தியசீலன் வீடியோ எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி சிறுமியை அடிக்கடி அனுபவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சத்தியசீலனின் மிரட்டல்களை தாங்க முடியாமல் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயார் இச்சம்பவம் குறித்து தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
விசாரணையில், சத்தியசீலன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, அவரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : வாடிக்கையாளர்கள் ஷாக்..!! போராட்டத்தில் குதித்த வங்கி ஊழியர்கள்..!! இந்த தேதிகளில் அந்த பக்கம் போகாதீங்க..?