fbpx

தன்னைவிட மூத்த பெண்ணுடன் உடலுறவு..!! பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்ற கள்ளக்காதலன்..!!க

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்குத் திருமணமாகி, இரண்டுப் பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு கணவன் உயிரிழந்துவிட்டதை அடுத்து, ஷூ கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, பிள்ளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 23 வயது இளைஞனுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜீவா, தனியார் பள்ளி ஒன்றில், வாகன ஓட்டுநராக வேலைச் செய்து வந்தார். இருவருக்கிடையிலான நெருக்கம் அதிகமானதால், திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். ‘கணவனை இழந்தவர், வயதில் மூத்தவர்’ என்பதால் ஜீவாவின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘குழந்தையையும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டனர்.

இதையடுத்து, ஜீவாவுக்கும், கைம்பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ‘குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம். பிறகு, ஊரறிய முறைப்படி நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று ஜீவா கூறியிருக்கிறார். இதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. ஆனாலும், கட்டாயப்படுத்தி குழந்தையை பறித்துச் சென்ற ஜீவா, கெஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண்ணான பப்பி மற்றும் இவரின் உறவினர் தோரணம்பதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகியோர் மூலம் குழந்தையை விற்பனைச் செய்ய பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 47) என்பவர், குழந்தையை ரூ.2 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, குழந்தையை விற்பனைச் செய்துவிட்டு, அந்த பெண்ணை சந்திக்கச் சென்ற ஜீவா, அவரின் சுயரூபத்தைக் காட்டினாராம். ‘இனி குழந்தையால் யாருக்கும் தொல்லைக் கிடையாது. நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே தொடர்ந்து உறவில் இருக்கலாம்’ என்று கூறியிருக்கிறார் ஜீவா.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது குழந்தையை திரும்பக் கேட்டிருக்கிறார். விற்பனைச் செய்துவிட்டதாக ஜீவா சொன்னதால், உடனடியாக ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்று புகாரளித்தார் கைம்பெண். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜீவா மற்றும் குழந்தையை விற்க உதவிய பப்பி, மணிகண்டன், குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தமிழ்ச்செல்வன் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

”சமூக வலைதளங்களால் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது”..!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து..!!

Sat Dec 9 , 2023
மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சமீப காலமாக உலகம் முழுவதும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் காட்டுத்தீயைப் போல பரவி வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் வலது, இடது, மையம் என பிரிந்துகிடக்கிறது. இதில் வெறுப்புணர்வும், பிரிவினைவாத கருத்துக்களும் பரவி வருகிறது. […]

You May Like