பொதுவாகவே பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பல வகையான கிரீம், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போன்ற பல பொருள்களை பயன்படுத்துவது உண்டு. அந்த வகையில், நீங்கள் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் சில ஆபத்துக்கள் ஏற்படுத்தும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். நகங்களில் அதிக அளவு நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் நகங்கள் பலவீனமாகி, அவை வெடிக்க ஆரம்பித்து படிப்படியாக அவை பிரகாசத்தை இழந்து விடும். எனவே நீங்கள் நெயில் பாலிஷ் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதில் உள்ள ரசாயனங்கள் உங்கள் உணவுடன் கலந்து அதை நீங்கள் சாப்பிட்டு விட்டால், உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
நெயில் பாலிஷில் உள்ள இரசாயனங்கள், வயிற்றின் செரிமானத்தை பாதித்து, ஹார்மோன் அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். டிரிபெனைல் பாஸ்பேட் போன்ற நச்சுப்பொருள் நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பெண்களிடம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நெயில் பாலீஷில் இருக்கும் ரசாயனங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். நெயில் பாலீஷில் டோலுமின் எனப்படும் ஒரு பொருள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடமிருந்து நேரடியாக குழந்தைக்கு அனுப்ப முடியும், இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். நெயில் பாலீஷில் உள்ள டோலுமின் ரசாயனம், உங்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும். தரம் குறைந்த நெயில் பாலீஷ் பயன்படுத்துவதால், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்படும்.
Read more: பயணம் செய்யும் போது வாந்தி அல்லது குமட்டல் வருகிறதா? அப்போ இனி இந்த ஒரு பொருள் போதும்..