எச்டிஎஃப்சி வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக அறியப்படும் எச்டிஎஃப்சி வங்கி, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கி நிரந்தர வைப்புத்தொகை வட்டி விகிதத்தை பிப்ரவரி 8 அன்று 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, சமீபத்திய நிரந்தர வைப்புத் தொகைக்கான விகிதங்கள் 17 பிப்ரவரி 2023 முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது. சமீபத்திய வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 4.75% முதல் 7.00% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 7.75% வரையிலும் வழங்குவதாகக் கூறியுள்ளது.