fbpx

சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் வெளியீடு..

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்துள்ளது..

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து குறித்த விவரங்கள் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. வெளியாகியுள்ளன. அதன்படி, பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஆண்டை விட சுமார் 26 லட்சம் உயர்ந்துள்ளது..

அதாவது ரூ. 1,97,68,885 ஆக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 2,23,82,504 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் அவரின் சொந்த மாநிலமான குஜராத்தின் காந்தி நகரில் இருந்த சொத்துக்களில் தனது பங்கை மோடி தானமாக வழங்கிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை எனவும், அவரிடம் ரூ 1,73,000 மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தபால் நிலையத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்களும், 1.89 லட்சம் மதிப்பில் காப்பீடும் மோடியின் பெயரில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது..

Maha

Next Post

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு தமிழக அரசு வேலை…! மாதம் ரூ.53,500 வரை ஊதியம்..! உடனே விண்ணப்பிக்கவும்…!

Wed Aug 10 , 2022
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Fishery Assistant பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உருவாகியுள்ளது, அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இந்த Fishery Assistant பணிக்கு என குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மீன்பிடி வலைகள் […]

You May Like