பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர், 2010 ஆம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவரது முன்னாள் உதவியாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஸ்பை ரேசர்ஸ்‘. ‘க்ரூட்’, தி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவருபவர் நடிகர் வின் டீசல். இந்தநிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், பின்னர், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் தன்னை வேலையில் இருந்து நீக்கியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக முன்னாள் உதவியாளர் அஸ்டா ஜோனாசன் வழக்குத் தொடர்ந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஃபாஸ்ட் ஃபைவ்” திரைப்படத்தின்போது, அட்லாண்டா ஹோட்டல் அறையில் நடிகர் டீசல் தன்னைத் தாக்கியதாகவும் உதவியாளர் அஸ்டா ஜோனாசன் குற்றம் சாட்டினார். மேலும், ஹோட்டல் அறையில், பல பெண்களை மகிழ்விப்பதற்காக தனது மார்பகங்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து முத்தமிட்டதாக ஜோனாசன் தனது வழக்கில் குற்றம் சாட்டினார். மேலும், உலகின் அதிக வருவாய் ஈட்டும் நடிகர்களில் ஒருவருக்கு எதிராகப் பேச பயந்து, பல ஆண்டுகளாக அமைதியாக இருந்ததாக தனது மனுவில் உதவியாளர் கூறியுள்ளார்.