fbpx

’அவரு ஓகே.. இந்த லிஸ்ட்ல இவரு புதுசா இருக்காரே’..!! வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கும் பிரபலங்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பிக்பாஸ் 7-வது சீசனின் முதல் வார இறுதியில் அனன்யா மற்றும் பவா செல்லதுரை வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

அத்துடன், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக உள்ளதால், மீதம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் பாதியில் தான் எண்ட்ரி கொடுப்பார்கள். அந்த வகையில், இம்முறையும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர்.

அதன்படி, சீரியல் நடிகை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளது உறுதியாகி உள்ள நிலையில், மற்றொரு வைல்டு கார்டு போட்டியாளராக புகழ்பெற்ற கானா பாடகரான கானா பாலா எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை..? உத்தரவு போட்டாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..?

Fri Oct 20 , 2023
அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்பது போன்ற அரசாணைகள் வெளியாகியிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்பது இந்து மத பண்டிகை என்பதை தாண்டி நாடெங்கும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட பண்டிகை. ஆனால், […]

You May Like