சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த ஒரு கணவன்-மனைவியின் வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது, அந்த மனைவி தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல். இன்னும் 9 அல்லது 10 மாதங்களில் தனது மனைவி இறந்துவிடுவார் என்பதை அறிந்த கணவன், தனது மனைவியை மகிழ்ச்சிபடுத்த தன்னால் இயன்ற அளவிலான அனைத்தையும் செய்துள்ளார்.
திருமணம் செய்ததிலிருந்து பல போராட்டங்களை கண்டு வந்த அந்த தம்பதி, சுமார் 10 ஆண்டுகளாக அந்த தடைகளை கடந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னும் சில மாதங்களில் தான் படுத்த படுக்கையாகிவிடுவோம் என்பதை எண்ணிய அந்த மனைவி ஒரு வித்தியாசமான ஆசையை தனது கணவரிடம் நிறைவேற்றுமாறு கேட்டுள்ளார்.
அது என்னவென்றால், தனது முன்னாள் காதலனுடன் ஒரு நாள் இரவை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்ற அந்த ஆசை. மேலும், தன்னை உடல் மற்றும் உள்ள ரீதியாக திருப்திபடுத்த தனது முன்னாள் காதலனால் மட்டுமே முடியும் என்று அவர் நினைத்தாக அந்த கணவர் கூறியுள்ளார். என்ன சொல்வது என்று அறியாது திகைத்துப் போன அந்த கணவன், சமூக வலைதளங்களில் பின்வருமாறு எழுதியுள்ளார். “ஒரு கணவனிடம் ஒரு மனைவி இப்படியும் ஒரு ஆசையை நிறைவேற்றி தரும்படி கேட்பாரா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் சாகும் தருவாயில் இருக்கும் ஒரு பெண், தனது முன்னாள் காதலருடன் உல்லாசமாக இருப்பது தான் தனக்கு சந்தோஷத்தை அளிக்கும் என்று கூறுகையில், தன்னால் அதை மறுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
அவருடைய பதிவிற்கு பதில் அளித்துள்ள பல நெட்டிசன்கள், அவர் செய்தது தவறு என்றும், அவர் அந்த பெண்மணியை விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் சிலர் அவருடைய பெருந்தன்மையை நினைத்து பாராட்டியும் உள்ளனர்.