தனிமையில் வசித்து வரும் தம்பதியினரிடையே ஒரு பிரியாணிக்காக நடந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட சண்டை முற்றியதில் மனைவியை தீ வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் வசித்து வந்தவர்கள் கருணாகரன்(75), பத்மாவதி (65) தம்பதியினர். கருணாகரன் ரயில்வேயில் வேலை பார்த்தவர். இவர்களுக்கு குமார்(46), மகேஸ்வரி(50), ஷகிலா(44), கார்த்திக் (40 என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாகரன் – பத்மாவதி தம்பதியினர் மன நலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டு சிகிச்சை பெற்றனர்.
பின்னர் அயனாவரம் தாகூர் நகரில் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு கருணாகரன் பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனக்கு பிரியாணி வேண்டும் என கேட்டதால்இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபமடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது மனைவி பத்மாவதி மீது தீ வைத்தார்.
தனது உடலில் தீப்பிடித்ததும் அலறிக் கொண்டே வீட்டுக்கு வெளியே வந்து கதறினார். பின்னர் அவரது கணவரை கட்டிப்பிடித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்கள் உடலில் தீயை அணைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பத்மாவதியிடம் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலம் அளித்தார். ’’பிரியாணி வாங்கி சாப்பிட்டதால் எனக்கு வேண்டும் என கேட்டேன். முதலில் அவர் மறுத்தார். பின்னர் சண்டை ஏற்பட்டது. இதனால் கணவன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார். என தெரிவித்தார்.
பிரியாணி சண்டையில் தனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் செயல்பட்ட கருணாகரன் 50 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மனைவி பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.