fbpx

தனது காதலனை கொன்று 14 துண்டுகளாக வெட்டி வீசிய பிரபல நடிகரின் மகன்..!

பிரபல ஸ்பெயின் நடிகர் ரோடோல்போ சாஞ்சோ அகுய்ரேயின். இவரது மகன் டேனியல் சாஞ்சோ ப்ரோஞ்சலோ. யூட்யூப் சமையல்காரரான டேனியல் சாஞ்சோவும், கொலம்பிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வின் அரியேட்டா ஆர்டீகாவும் ஓரினச் சேர்க்கை காதலர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்தின் கோ ஃபங்கன் தீவு காவல் நிலையத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வின் அரியேட்டா ஆர்டீகாவை காணவில்லை என டேனியல் சாஞ்சோ புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அன்றே கோ ஃபங்கன் கடற்கரையில் உள்ள குப்பைக் கிடங்கு பகுதியில் மனித உடல் உறுப்புகளின் எச்சங்கள் இருப்பதாக அங்கு துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனது. இதையடுத்து உடல் உறுப்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அது அறுவை சிகிச்சை நிபுணர் எட்வின் அரியேட்டா ஆர்டீகாவுடையது என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து டேனியல் சாஞ்சோவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தான்தான் ஆர்டிகாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். ஓரினச்சேர்கையாளர்களான தங்களுக்குள் உடல் உறவு மற்றும் பணம் தொடர்பாக தகராறு வந்ததாகவும் ஆர்ட்டிகா தன்னை ஒரு பணயக் கைதி போல் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் டேனியல் சாஞ்சோ.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆர்ட்டிகாவை தான் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆர்ட்டிகாவின் உடல் பாகங்களை வீசிய 7 இடங்களுக்கு டேனியல் அழைத்து சென்று அடையாளம் காட்டினார். இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், இது திட்டமிடப்பட்ட கொலை என்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Maha

Next Post

சபரிமலையில் இன்று நடை திறப்பு..!

Wed Aug 9 , 2023
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட […]
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! தரிசன நேரம் திடீர் மாற்றம்..!! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

You May Like