கர்நாடக மாநிலம் பெலகாவியின் சிகோடி தாலுக்கா உமாராணி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீமந்தா இட்னாலி (வயது 40). அவரது மனைவி சாவித்திரி. கணவர் ஸ்ரீமந்தா குடிக்கு அடிமையான நிலையில், அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். அந்த வகையில், டிசம்பர் 8ஆம் தேதி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மனைவி மதுபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், கணவரின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி, தனது வீட்டில் இருந்து வெகுதூரத்தில் போட்டுள்ளார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில், ஸ்ரீமந்தாவின் சடலத்தை டிசம்பர் 10ஆம் தேதி போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஒருகட்டத்தில் மனைவி மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குடிபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவரது முகத்தை ஒரு கல்லால் அடித்தும், உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது வீட்டிலிருந்து வெகுதூரம் இழுத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், “என் கணவர் என்னை உல்லாசத்திற்கு அழைத்தபோது நான் மறுத்ததால், என் மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், அவரை கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கணவரை கொலை செய்த பின் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, உடல் உறுப்புகளை ஒரு பையில் போட்டு, வயல்களில் புதைத்துள்ளார். பின்னர், வீடு திரும்பியதும் கத்தி, கணவன் படுத்திருந்த கட்டில், ரத்தம் பட்ட அவனது உடைகள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு, கல்லைக் கட்டி கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். கணவனை வெட்டிக் கொன்ற ரத்தக்கறை படிந்த இடத்தையும் சுத்தம் செய்து, கணவனின் தலையை நசுக்கப் பயன்படுத்திய கல்லைக் கழுவி, வீட்டில் கொட்டகையில் வைத்துள்ளார்.
பின்னர், குளித்துவிட்டு, தான் அணிந்திருந்த ஆடைகளை எரித்து சாம்பலை வெளியில் கொட்டியுள்ளார். பின்னர், கணவரின் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். வீட்டைச் சுத்தம் செய்யும் போது எழுந்த மூத்த மகளை, நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது என எச்சரித்துள்ளார். இவை அனைத்தையும் போலீசாரிடம் சாவித்திரி வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
Read More : சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்..!! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி..!!