தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆளுநர் செய்தது அவை மரபு மீறிய செயல் என்று பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. விசிக, மார்க்சிஸ்ட் ஆகியவை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வர் என்றால் அது நம் முதல்வர் முக.ஸ்டாலின் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி நிகிழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டப்பேரவையில் தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் ஒரு சம்பவத்தை நம் தலைவர் செய்துள்ளார். பொதுவாக நம் தலைவர் சட்டப்பேரவையில் வெளியிடும் அறிவிப்பால் எதிர்கட்சிகளைதான் ஓட விடுவார். ஆனால், தற்போது ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் என்றார்.