fbpx

’தூக்கத்துலயே போய் சேர்ந்துட்டாரு’..!! நடிப்பால் ஊரையே நம்ப வைத்த பெண்..!! உறவினர்கள் வைத்த ட்விஸ்ட்..!!

செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவேக் வீட்டிற்கு அருகிலேயே ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி திருமண வயதில் ஒரு பெண்ணும் உள்ள நிலையில், ஏகாம்பரத்துக்கும், ஜெகதீஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. யாரை பற்றியும் கவலைப்படாமல், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விவேக் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். உறவினர்களிடம், தூக்கத்திலேயே விவேக்கின் உயிர் பிரிந்து விட்டதாக சொல்லி, ஏதும் அறியாதவளைப் போல ஜெகதீஸ்வரி அழுது புலம்பி இருக்கிறார். தூக்கத்தில் உயிர் பிரிவதற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நல்ல சாவு என்று ஒப்பாரி வைத்து அழுததை பரிதாபமாகவே உறவினர்கள் பார்த்து வந்தனர். துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள், விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முடிவு செய்து, ஜெகதீஸ்வரிக்கு தெரியாமலேயே அருகில் இருந்த அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில், போலீசார் வீட்டிற்கு வந்து விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விவேக்கின் மரணம் குறித்து அவரது மனைவி ஜெகதீஸ்வரியிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது கள்ளக்காதலை கணவர் தொடர்ந்து கண்டித்து வந்ததாலும், இனியும் ஏகாம்பரத்துடன் உறவை தொடரக் கூடாது என்று ச்அடித்து துன்புறுத்தியதாலும், கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலைச் செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுத்து ஜெகதீஸ்வரி, ஏகாம்பரம் இருவரையும் அணைக்கட்டு போலீசார் கைது செய்தனர்.

Chella

Next Post

காவிரியில் சட்டவிரோத மணல் குவாரிகளா….? அருகில் தாக்கம் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை…..!

Wed Mar 29 , 2023
கரூரை சேர்ந்த சாமானிய மக்கள் நல கட்சியின் தலைவர் குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனதில் கரூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதியில் ஆற்றுப்பொடுகையில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்தப் பகுதியில் சீமை கருவேல புதர்கள் நிரம்பி காப்பி மணல் திட்டுகளாக மாறி இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத […]

You May Like