fbpx

மேஜையில் தலை, பாத் டப்-ல் தலையில்லாமல் குளித்த முண்டம்..!

ஜப்பானின் ஒக்கைடோ தீவில் உள்ள லவ் ஓட்டல் என்ற பெயரில் லாட்ஜுடன் இணைந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஹிட்டோஷி உரா என்ற 62 வயது நபர் ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறார். இருவரும் அங்கு உணவருந்திவிட்டு ஓட்டல் அறைக்கு சென்றனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் ஆண் – பெண் இருவர் கறுப்பு அங்கி போன்ற உடையுடன் அங்கு சென்றனர். இதையடுத்து, இரவு 12 மணியளவில் ஹிட்டோஷி உராவை தவிர மற்ற 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேறினர். அப்போது அவர்கள் மூவருமே கறுப்பு அங்கியை அணிந்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த பாத் ரூம் குளியல் தொட்டியில் அவரது தலையில்லாத முண்டம் இருந்துள்ளது. இதை பார்த்து அலறியடித்துக் கொண்டு வெளியே வந்த ஊழியர்கள், அங்கு மேஜையில் அவரது தலை இருப்பதை பார்த்து இன்னும் பயந்து போய் வெளியே ஓடிச் சென்றனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், ஹிட்டோஷியுடன் வந்த பெண் ரூனா டாமுரா (29) என்பது தெரியவந்தது. போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர். பின்னர் ஹிட்டோஷியை கொலை செய்ய உடந்தையாக இருந்த அவரது தந்தை ஒசாமு டாமுரா (59) மற்றும் தாயாரையும் போலீஸ் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ரூனா டாமுரா ஒரு சைக்கோ பெண்மணி என்பதும், தனது தந்தையிடமே அவர் மனநல சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. தங்கள் மகளின் கட்டுக்கடங்காத கொலை வெறியை போக்க குடும்பமே சேர்ந்து ஹிட்டோஷியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Maha

Next Post

முக்கிய அறிவிப்பு...! வரும் ஜூலை 31 முதல்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌...! எங்கு சென்று பெறுவது...?

Thu Jul 27 , 2023
11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ ஜூலை 31 முதல்‌ வழங்கப்படும்‌. பள்ளிகள்‌ வாயிலாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தேர்வு எழுதிய மையத்தின்‌ வாயிலாகவும்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என அரசு தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவித்துள்ளது. மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 10.07.2023 மற்றும் 20.07.2023 அன்று இவ்வலுவலகத்திலிருந்து அரசுத் தேர்வுகள் […]

You May Like