சாதாரணமாக பலரது வீடுகளில் இருக்கும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கருஞ்சீரகம் தான். நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், வராமலும் தடுக்கிறது.
கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் இதில் உள்ளது, மேலும், கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள், புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளது.
பொதுவாக வயதானவர்களுக்கு நியாபக மறதி இருப்பது இயல்பு, அது போன்ற பிரச்சனைகளுக்கு வெறும் வயிற்றில், தினமும் இந்த கருஞ்சீரகத்தில் தேன் கலந்து சாப்பிடுவது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், நரம்பு மண்டல பிரச்சனைகள் குணமாகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. இதற்கு, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து சாப்பிடலாம். இரத்தத்தில், கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
கருஞ்சீரகத்தை நாம் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், ரத்த அழுத்தம் குறையும், ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்தப்போக்கு குணமாகும், ஆஸ்துமாவை குணமாக்கும், உடல் எடையை குறைக்கும், தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சீறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது, புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது, செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது, மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது, உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது, மற்றும் வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது. இப்படி எண்ணற்ற நன்மைகளை கொண்ட கருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம். உடலில் உள்ள வலிகளை குணமாக்க இதன் எண்ணெயை பயன்படுத்தலாம்.
Read more: பாதம் பருப்பை விடுங்க, அதை விட இதில் தான் சத்து அதிகம்; இதய நோய் கூட வரவே வராதாம்..