பெரும்பாலும் நாம் காய்கறி என்றாலே உருளைக்கிழங்கு, கேரட் போன்ற ஒரு சில காய்கறிகளை தான் நாம் அடிக்கடி வாங்குவது உண்டு. ஆனால் பெரும்பாலும், அதிக சத்துக்கள் நிரநித பல காய்கறிகளை மறந்து விடுவோம். அந்த வகையில், பலர் அதிகம் வாங்காத காய்களில் ஒன்று தான் கொத்தவரங்காய். பலருக்கு இந்த கையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிவது இல்லை.
ஆம், இந்த கொத்தவரங்காயில் ஏராளனமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் நமது உணவில் அடிக்கடி கொத்தவரங்காய் சேர்த்துக் கொண்டால், மலச்சிக்கல் இருக்காது. அதே சமயம், உடல் எடை சட்டுன்னு குறையும். , அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஆம், கொத்தவரங்காய் சாப்பிடும் போது நமது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், இந்த காயை அடிக்கடி சாப்பிடுவதால், அஜீரண கோளாறுகள் ஏற்படாது. சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்தால் நீங்கள் முதலில் சாப்பிட வேண்டியது இந்த காயை தான். ஆம், ரத்த சோகை பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி இந்த காயை தங்களின் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
மேலும், கொத்தவரங்காய் அதிகம் சாப்பிடுவதால், இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும், இரத்த அழுத்தம் குறையும். கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் கருவின் ஆரோக்கியம் நன்கு மேம்படும். வாரத்திற்கு இரண்டு முறை, உங்கள் உணவில் கொத்தவரங்காய் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு தேவையான அளவு கால்சியம் சத்து கிடைக்கும் என்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் எல்லாம் வலுவடையும்.
கொத்தவரங்காய் அடிக்கடி உட்கொள்வது முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற சரும பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவும்.