கிழங்கு வகைகளில் பொதுவாகவே அதிக சத்துக்கள் நிறைந்தது. அதில் சேப்பங்கிழங்கு மட்டும் விதிவிலக்கல்ல. கண்பார்வை தெளிவாவது முதல் புற்றுநோய் கட்டிகள் வளராமல் தடுப்பது வரை பல்வேறு நன்மைகள் கொண்ட இந்த சேப்பங்கிழங்கு பற்றி மருத்துவர் மைதிலி கூறியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல யூடியூப் பக்கத்தில் பேசிய மருத்துவர் மைதிலி, ” சேப்பங்கிழக்கில் அதிக நார்சத்து, கார்போஹைட்ரேட், விட்டமின் A,C,E,B6,B 9 போன்றவை உள்ளது. மேலும் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் வளராமல் தடுக்க உதவும். குறிப்பாக நுரையீரல், கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் கட்டிகள் வளராமல் தடுக்க உதவும்.
சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடென்டுகள் ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் வயிற்றுப்பூச்சி, மலச்சிக்கல் போன்றவை சரியாகும். மேலும் குடல் நோய்களுக்கு எதிராக செயல்படும்.
ஆண்டிஆஸிடெண்ட்கல் அதிகம் உள்ளதால் கண்பார்வை தெளிவாவதுடன், கண்புரை போன்ற பாதிப்புகளையும் தடுத்துகிறது. நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் சேப்பங்கிழங்கு நல்ல நிவாரணியாக அமையும். சேப்பங்கிழங்கின் இலையிலும் விட்டமின் சி, மெக்னீசியம் உள்ளது. இதனால் நீரிழிவு நோய் குணமாகிறது. இதனை ஒரு இலை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து கீரை போல் சமைத்தும் உண்ணலாம்” என தெரிவித்துள்ளார்.