fbpx

நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …

ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனுடன் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான உணவு வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது. ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள …

காய்கறிகள் உடல் நலத்திலும் நம் உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. கொத்தவரங்காய் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. மேலும் இதனை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதோடு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. கொத்தவரங்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.…

அம்மான் பச்சரிசி இலை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வைக்கக்கூடிய ஒரு செடியாகும். குளிர்ச்சியான இடங்களில் இந்த செடி மழை காலத்தில் பரவலாக வளரக்கூடியது. இந்தச் செடியின் கொடிகள் மற்றும் இலைகளை நறுக்கினால் அவற்றிலிருந்து பால் வரும். இந்தப் பால் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தச் …

வெள்ளரி குடும்ப வகையைச் சேர்ந்த பீர்க்கங்காய் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த காய்கறியில் மட்டுமல்லாது இவற்றின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்திருக்கிறது. …

வறண்ட நில தாவரமான அரளி, வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் ஒரு செடியாகும். மேலும் இது நெடுஞ்சாலைகளில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்துவதற்கும் மண்ணரிப்பை தடுப்பதற்காகவும் வளர்க்கப்படுகிறது. செடிகளில் அதிக விஷத்தன்மை கொண்டது அரளி. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்களின் முதல் ஆயுதமாக இருப்பது அரளி விதை. இந்தச் செடியை …

புடலங்காய் நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி ஆகும். மேலும் சைவ விருந்து என்றால் அதில் புடலங்காய் கூட்டு இல்லாமல் இருக்காது. கொடி வகையைச் சார்ந்த புடலங்காயில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனிசு, மக்னீசியம், போன்ற மினரல்களும் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக காணப்படுகிறது. சுவைக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு …

அலங்கார தாவரமாக பல வீடுகளிலும் வளர்க்கப்படும் ரணகள்ளி இலை பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது. இவை பெரும்பாலும் அழகிற்காக வளர்க்கப்பட்டாலும் இவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயுர்வேத மருத்துவம் இந்த இலைகளின் மகத்துவத்தை பற்றி விரிவாக கூறுகிறது. இந்த ரணகள்ளி இலைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற …

பண்டைய காலம் முதலே நம் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய நறுமணப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் திப்பிலி பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. திப்பிலியின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் நோய்கள் பற்றி பார்ப்போம்.

மருத்துவ மூலிகையான திப்பிலியில் பீட்டாசிட்டோஸ்டெரல், ஆல்கலாய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் …

பருவமடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த சுழற்சியின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதோடு தசை பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இவை பெண்களின் ஹார்மோன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அன்னாசி பழச்சாறு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, …