இந்தியாவின் தேசிய வியாதியாக உருவெடுத்துள்ளது சர்க்கரை நோய். ஆம், சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரையுமே இந்த சர்க்கரை நோய் பாதிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது தான். மேலும், இது பரம்பரை வியாதியாகவும் உருவெடுத்துள்ளது. சர்க்கரை நோய் பற்றி தெரிந்தவர்கள், கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து விட்டனர். ஆனால், இன்னும் பலருக்கு சர்க்கரை நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் அதிகம் சாப்பிடக் கூடாது, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். ஆனால், அவர்களின் வருமான சூழ்நிலை காரணமாக அவர்களால் முறையான உணவு பழக்கத்தை பின் பற்ற முடியாமல் போய் விடும். அது மட்டும் இல்லாமல், சர்க்கரை நோய்க்காக காலம் முழுவதும் மாத்திரை வாங்கியே பாதி சம்பளம் அழிந்து விடும். இதனால், முடிந்த வரை சர்க்கரை வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே, வீட்டில் உள்ள பொருள்களை வைத்து குறைத்து விடுவது நல்லது.
அந்த வகையில், வீட்டில் இருக்கும் கிராம்பு சர்க்கரை நோயை குறைக்க பெரிதும் உதவும். ஆம், கிராம்பை கொண்டு உங்கள் சர்க்கரை அளவை சுலபமாக குறைக்கலாம். ஏனென்றால், கிராம்பில் நைஜீரிசின் என்ற சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி விடும். அது மட்டும் இல்லாமல், கணையத்தில் இன்சுலின் சுரக்க வழிவகுக்கும். இதனால் மாத்திரை வாங்க அதிக செலவு செய்வதை விட்டு விட்டு, இது போன்ற வீட்டு வைத்தியங்கள் செய்வது சிறந்தது.
இதற்கு நீங்கள், இரவு ஒரு டம்ளர் தண்ணீரில் 3 கிராம்பை போட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் கிராம்பை எடுத்து விட்டு அந்த நீரை குடிக்கலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அது மட்டும் இல்லாமல், இந்த தண்ணீரை குடிப்பதால் உங்களுக்கு ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.
Read more: தினமும் இந்த மஞ்சள் நீர் குடிங்க, கொரோனாவே திரும்ப வந்தாலும் உங்களுக்கு ஒன்னும் ஆகாது!!