நமது முன்னோர்கள், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டு வந்தார்கள். குறிப்பாக மாலை நேரம் சாப்பிடும் ஸ்நாக்ஸ் கூட ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நேரம் இல்லை என்று சொல்லி விட்டு, உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தம் துரித உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். குறிப்பாக ஸ்நாக்ஸ் என்றாலே, கட்டாயம் அது ஆரோக்கியம் இல்லாத பாஸ்ட் புட் ஆகத்தான் இருக்கிறது.
இதனால் தான் நமது முன்னோருக்கு 80 மற்றும் 90களில் இருந்த ஆரோக்கியம், தற்போது உள்ள தலைமுறையினருக்கு 30 வயதில் கூட இருப்பது இல்லை. சிறுவர்கள் பலர் மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர், 25 முதல் 30 வயதிலேயே பலருக்கு இடுப்பு வலி, மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்காக எத்தனை ஆயிரம் செலவு செய்து மாத்திரை சாப்பிட்டாலும், பக்கவிளைவுகள் தான் ஏற்படுமே தவிர, ஆரோக்கியம் மேம்படாது.
இதனால் முடிந்த வரை நமது முன்னோர் பின்பற்றிய உணவு முறையை பின்பற்றுவது நல்லது. உணவு பழக்கத்தை உடனடியாக முற்றிலும் மாற்ற முடியவில்லை என்றால், முதலில் மாலை நேர ஸ்நாக்ஸ் சாப்பிடுவதில் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம், அந்த வகையில், பலரும் மறந்துப் போன ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றால் அஹு கருப்பு கொண்டைக்கடலை தான்.
இதில் ஏராளனமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் மூலம், உடல் பலம், மனநலம் மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல், ஆயுள் நீடிப்பு மற்றும் உடல் ஆரோக்கியதை மேம்படுத்துகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட கருப்புக் கொண்டைக்கடலையில், அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்டது. மேலும், இது கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும், இதனால் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு, உடல் எடை குறையும். என்ன தான் கருப்பு கொண்டக்கடையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதையும் நாம் அளவாகத்தான் சாப்பிட வேண்டும். ஒரே நாளில் அதிகமாக சாப்பிடுவிடக் கூடாது. தினமும் சிறிது அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கும். அந்த வகையில், இவ்வாறு கருப்புக் கொண்டைக்கடலை உணவில் சேர்த்தால், 100 வயதையும் எளிதாகத் தாண்டி விடலாம்.