பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு என்றால் அது முருங்கை தான். முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் 100 நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது உண்டு. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாகும்.
இதிலுள்ள கால்சியம், பசும்பாலை விட, 4 மடங்கு அதிகம்.. இப்படி முருங்கையின் நன்மைகளை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், மற்ற கீரைகளை விட, முருங்கைக்கீரையில் அதிக அளவு இரும்புச் சத்துக்கள் உள்ளது. முருங்கைக் கீரையில் நிறைந்துள்ள இரும்புச்சத்து உடலுக்கு பல நன்மைகள் தருகிறது. பொதுவாக, முருங்கை மரத்தின் அனைத்து பகுதிகளும் உடல் வலிமையை வழங்கும்.
குறிப்பாக முருங்கைக் கீரை, உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். ஆனால் ஒரு சிலருக்கு முருங்கை கீரையை பொரியலாக சாப்பிட பிடிக்காது. இதனால் முருங்கை கீரையை சாப்பிடவே மாட்டர்கள். இதனால் இப்படி முருங்கை கீரை சாப்பிடாதவர்களுக்கு முருங்கை கீரையில் பொடி செய்து தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், இரும்புச்சத்து நிறைந்த முருங்கை பொடியை எப்படி செய்யலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் விவரித்துள்ளார். இதற்கு முதலில், ஒரு கடாயில் உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளுங்கள். பொருள்கள் சற்று சிவந்து உடன் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், வெயிலில் காய வைத்த முருங்கைக் கீரையை கடாயில் போட்டு சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து விடுங்கள். இப்போது ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, வெள்ளை எள் மற்றும் கொத்தமல்லி ஆகியவை சேர்த்து நன்கு வறுக்கவும். பின்னர் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து, மிதமான சூட்டில் வறுக்கும்.
பிறகு, அதில் சிறிது புளி சேர்த்து, வறுத்து, ஆற வைக்கவும். நன்கு ஆறிய பிறகு, இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பவுடரை தனியாக வைத்து விடுங்கள். பின்னர், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூளுடன் அரைத்து வைத்த பவுடருடன் கலந்து விடவும். இந்த முருங்கை பொடி 3 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
Read more: “தாய்ப்பாலுக்கு பிறகு, ஒரு சிறந்த உணவு இது தான்” டாக்டர் சிவராமன் பரிந்துரைத்த அற்புத உணவு..