நமது முன்னோர் பெரும்பாலம் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே பெரும்பாலான நோய்களை குணப்படுத்தினார். இதனால் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று கூட சொல்லலாம். ஆனால் நாம், ஒரு நோய் வருவதற்கு முன்பே மெடிக்கலில் ஏதாவது ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். இதனால் பக்கவிளைவுகள் தான் அதிகம் ஏற்படும்.
நமது இந்த செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம், பலருக்கு நமது கிச்சனில் இருக்கும் பொருள்களில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிவது இல்லை. நாம் கிட்சனிலேயே அற்பதமான மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கையான மருந்துகளை விட்டுவிட்டு, அதிகம் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை நம்பாமல் இருப்பது நல்லது.
அந்த வகையில், பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட வெந்தயத்தில், என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பதைப்பற்றி இப்பதிவில் காணலாம். முதலில், வெந்தையத்த நன்கு வறுத்து, அதனுடன் சம அளவு கோதுமை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம் குறையும் .
மேலும், வெந்தயத்தை ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின்னர் மையாக அரைத்து, அதை தலையில தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வெந்தயத்தை பொடியாக்கி, அதை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், உடற்சூடு, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க, வெந்தயத்தை விட சிறந்த மருந்து கிடையாது ஆம். வெந்தையத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைவதோடு, உடல் எடையும் குறையும். நீங்கள் இதற்கு வெந்தயம் மட்டும் சாப்பிடாமல், அதனுடன் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
வெந்தயம் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை ஊக்குவிப்பதால், 40 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் கட்டாயம் வெந்தயம் சாப்பிட வேண்டும். குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரப்பதை அதிகரிக்க, சிறிதளவு வெந்தயத்தை கஞ்சியில் சேர்த்து காய்ச்சிக் குடிக்கலாம்.