புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் ஒரு அற்புதமான பொருள் என்றால் அது நிலக்கடலை தான். ஆம், இது ஏழைகளின் சத்துப்பொருள் என்று அழைக்கப்படும் நிலக்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது மட்டும் இல்லாமல், விலையும் மலிவு தான். இதனால், யார் வேண்டுமானாலும் இதை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.
நிலக்கடலையில் புரதம் (26%), கொழுப்பு (75%), கொலின், பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் அதிகம் உள்ளன. தயமின், நியாசின் வைட்டமின்களும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. அதவாது, 100 கிராம் நிலக்கடலை 570 கலோரி ஆற்றலைத் தரக்கூடியது. மேலும், நிலகடலையில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது.
பாதம் பருப்பில் உள்ளதை விட அதிக நல்ல கொலஸ்ட்ரால் நிலக்கடலையில் தான் உள்ளது. இதனால், நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், அதிக காசு கொடுத்து நீங்கள் பாதம் வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமும் இருக்காது. மேலும், இதில் போலிக் அசிட் அதிகம் உள்ளதால், பெண்களின் இனபெருக்க உறுப்புகள் ஆரோக்யமாக இருக்கும்.
இதனால், வளரும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்தோர், குறைந்த உடல் எடை கொண்டோர், தாய்மார்கள், மாணவர்கள் தினமும் 100 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிடலாம். மேலும், இது பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. மேலும், பெண்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. அது மட்டும் இல்லாமல், பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் பருமன் கொண்டவர்கள் கூடக் குறைந்த அளவில் நிலக்கடலைச் சாப்பிடலாம். ரத்தக் கொழுப்பு மிக்கவர்கள், வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. மேலும், இதை பச்சையாக சாப்பிடக்கூடாது. இதை அவித்து அல்லது வறுத்துச் சாப்பிடுவது தான் நல்லது.
Read more: தினமும் இந்த ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க, 100 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழலாம்..