ஆரோக்கியமான உணவை சாப்பிடும் போது, நாம் ஆரோக்கியமாக எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ முடியும். இதனால் தான் நமது முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். நமது முன்னோர் உணவை மருந்தாக சாப்பிட்டு வந்தார்கள், ஆனால் நாம் மருந்தாக சாப்பிட்டு வருகிறோம். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம் தான்.
பலர் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. தினமும் பசிக்கு ஏதாவது ஒன்று சாப்பிட வேண்டும் என்பதற்காக கண்டதை சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. பலருக்கு இருக்கும் நோய்களுக்கு காரணம் இது தான். பலர் சிறுதானியங்கள் சாப்பிடுவதையே மறந்துவிட்டார்கள். மாலை நேரத்தில் பசித்தால் சிப்ஸ், அல்லது பிஸ்கட் சாப்பிடுகிறார்கள்.
அந்த வகையில் நாம் மறந்துப் போன ஒரு அற்புதமான சிறுதானியம் என்றால் அது கொள்ளு தான். பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படும் இந்த சிறுதானியத்தில், அதிகமான அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால், இதை மனிதர்கள் சாப்பிடும் போது, பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக பெண்கள் கொள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால், ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் பிரச்சனை போன்றவற்றிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குறிப்பாக, உடலில் இருக்கும் ஊளைச்சதையை குறைக்க இதை விட சிறந்த தீர்வு இருக்காது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், கொள்ளுப் பருப்பை இரவில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்படி செய்வதால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். மேலும், தற்போது உள்ள காலகட்டத்தில் பல பெண்களுக்கு இருக்கும் பிசிஓடி பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு இது நிரந்தர தீர்வு அளிக்கும். அதேபோல பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் அடக்கடி கொள்ளு சாப்பிட வேண்டும். கொள்ளு சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா என்றால் இல்லை.
ஏனென்றால், இது ஆண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மையை குணமாக்கும். ஆனால், பெண்களுக்கு இருக்கும் பிசிஓடி, ஆண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மையை இது குணமாக்குவதால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனுடன் சேர்த்து நீங்கள் ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். கொள்ளு பருப்பை சுண்டல் போல் மாலை நேரத்தில் சாப்பிடலாம். இதை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம்.