கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு சில பழங்களில் முக்கியமானது தான், முக்கனிகளில் ஒன்றான மாம்பழம். இந்த மாம்பழம் சாப்பிடுவதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பலரும் இதனை ஒரு அளவுடனே பயன்படுத்துகிறார்கள்.
ஆனாலும், இந்த மாம்பழத்தை ஒரு அளவுடன் சாப்பிட்டால், இதன் மூலமாக நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாம்பழத்தில், விட்டமின் பி6, விட்டமின்,சி, பீட்டா, கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மாம்பழத்தில் இருக்கின்ற விட்டமின்கள் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த மாம்பழத்தில் இருக்கின்ற பெக்டின் என்ற கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து உடலில் இருக்கின்ற கொழுப்புகளை வெகுவாக குறைக்கிறது.
மேலும், இந்த மாம்பழத்தில் இருக்கின்ற மாவுச்சத்து உடல் எடையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாம்பழத்தை சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த மாம்பழத்தை சாப்பிட்டால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதேபோன்று மாம்பழத்தில் இருக்கின்ற விட்டமின்கள், பீட்டா, கரோட்டின் போன்றவை விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும். மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் விட்டமின் பி6, மாம்பழத்தில் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.