பொதுவாக, நாம் எப்போது வெங்காயம் உரித்தாலும், உடனே அதை குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் நாம் அப்படி தேவை இல்லாதது என்று நினைத்து தூக்கி வீசும் குப்பையான வெங்காய தோலில், ஏராளமான நன்மைகள் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். வெங்காய தோலில் விட்டமின் சி ,ஈ ,ஏ போன்ற பல சத்துக்கள் உள்ளது.
இதனால், இந்த தோல் நம் சரும பிரச்சினைகளை குணமாக்க உதவுகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த தோலில் மிகவும் குறைவான அளவு கலோரிகள் தான் உள்ளது. இதனால் இந்த வெங்காய தோலை வைத்து டீ தயாரித்து குடித்தால் கட்டாயம் உடல் எடை குறையும்.. மேலும், இந்த தோலில் உள்ள பிளவனாய்டுகள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டும் இல்லாமல் இதய நோய் வராமல் தடுக்கிறது.
வெங்காய தோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், நமக்கு சளி தொல்லை ஏற்படாமல்பாதுகாக்கிறது. குறிப்பாக, நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களாக இருந்தால், கட்டாயம் உங்கள் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில், நீங்கள் பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்படுபவராக இருந்தால், உங்களுக்கு வெங்காய தோல் தலையணை நிரந்தர தீர்வு கொடுக்கும்.
ஆனால் இதன் மூலம் விரைவான தீர்வு கிடைக்காது. சற்று தாமதமானாலும் நல்ல தீர்வை கொடுக்கும். இதற்கு முதலில், உங்கள் வீட்டில் இருக்கும் பழைய திக்கான காட்டன் டவல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டவலை இரண்டாக மடித்து மூன்று புறமும் தையல் போட்டு விடுங்கள். இப்போது நான்காவது வாய் வழியாக, நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் வெங்காய தோலை திணிக்க வேண்டும்.
பின்னர், நான்காவது பக்கத்தையும் தைத்து விடுங்கள். இப்போது இந்த தலையணையை நீங்கள் உட்காரும் போது இருக்கையாக பயன்படுத்துங்கள். இந்த வெங்காயத் தோல் மட்டும் கொண்டு செய்யப்படும் இந்த தலையணையை நாம் பயன்படுத்தும் போது, பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும்.
Read more: எச்சரிக்கை!!! நீண்ட நாட்கள் கொலஸ்ட்ரால் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் ஞாபக மறதி..