fbpx

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கா? அப்போ இந்த ஸ்நாக்ஸ் கண்டிப்பா சாப்பிடிடுங்க..

நீரிழிவு நோயாளிகளுக்கு, உணவு மற்றும் உணவுமுறை மாற்றங்கள் உடலின் சர்க்கரை அளவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் நடவடிக்கையாகும். இதனால் சர்க்கரை நோயாளிகள், தாங்கள் சாப்பிடும் உணவின் மீது அதிக கவனமாக இருக்க வேண்டும். இதனால் சர்க்கரை நோய் வந்து விட்டால் என்ன சாப்பிடுவது என்று தெரியாது. என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்று அஞ்சுவது உண்டு. அந்த வகையில், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்றால் அது பனங்கிழங்கு தான்.

பனங்கிழங்கில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசெமிக் லோடு குறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை தைரியமாக சாப்பிடலாம். இந்த கிழங்கில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மந்தப்படுத்தி, உணவு உட்கொண்டவுடன் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பல நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், இன்சுலின் அளவை அதிகரித்து ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கை சாப்பிடுவதால், நரம்பு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இந்த கிழங்கில், வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இன்சுலின் சரியாக செயல்பட உதவுகிறது. மேலும், இந்த கிழங்கில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் சீராகி, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும், இந்த கிழங்கில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. பனங்கிழங்கில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து விடுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும், மலச்சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் இந்த கிழங்கை சாப்பிட வேண்டும்.

Read more: கை, கால், இடுப்பு வலி அதிகமா இருக்கா? அப்போ இனி இதை சாப்பிடுங்க.. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..

English Summary

health benefits of palmyra palm

Next Post

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் 17 பேர் சிறைபிடிப்பு!

Tue Dec 24 , 2024
Fishermens Arrest: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சிறைபிடித்து சென்றனர். தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மீனவர்களை […]

You May Like