பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு என அடிக்கடி இருக்கும் டிபன் என்றால் அது இட்லி அல்லது தோசை தான். என்ன சமைக்கலாம் என்று யோசித்த உடன் முதலில் நினைவிற்கு வருவது முதலில் இட்லி தோசையாகத்தான் இருக்கிறது. பொதுவாக இட்லி மாவை புளிக்கவைத்து பயன்படுத்துவதால் செரிமானம் எளிதாகிறது. என்ன தான் வாரம் முழுவதும் இட்லி அல்லது தோசை சமைத்தாலும், மாவை மட்டும் பெரும்பாலானோர் வீடுகளில் அரைப்பது இல்லை. இதே இட்லி தோசை சாப்பிட்ட நமது முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் அதே இட்லி தோசையை, கடை மாவில் செய்து சாப்பிடும் இந்த தலைமுறையினருக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.
முன்பு, வீடுகளில் அரிசி, உளுந்து ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து மாவு தயாரிப்பது வழக்கம். இதனால், இயற்கையான நொதித்தல் நிகழ்ந்து, மாவு செரிமானத்திற்கு எளிதாகிறது. மேலும், மாவில் உள்ள சத்துக்கள் மேம்படுகின்றது. ஆனால், கடைகளில் விற்கப்படும் மாவில், இயற்கையான முறை பின்பற்றப்படுவது இல்லை. சில உற்பத்தியாளர்கள், விரைவான உற்பத்திக்காக, செயற்கை நொதித்தலை பயன்படுத்துகின்றனர். இது, மாவின் சத்துக்களை குறைத்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், சில சமயங்களில், மாவின் தரத்தை அதிகரிக்க, தேவையற்ற இரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், நீண்ட கால உடல் நல பாதிப்புகளை ஏற்படும்.
ஆனால், கடையில் வாங்கும் மாவில், தேவையற்ற பாக்டீரியாக்கள் இருப்பதால் அது நமது உடல் நலத்தை கெடுத்து, பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. அது மட்டும் இல்லமல், பழைய மாவிலேயே புதிய மாவை கலந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அரிசி மாவில் ஜவ்வரிசி கிழங்கு போன்ற மாவினை கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் பலருக்கு செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமை. எனவே முடிந்தவரை அரிசி மாவினை வீட்டில் அரைத்து சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு சிறந்தது.
ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், நமது உடல் நலத்திற்கு அவசியம். எனவே, உணவு தயாரிப்பில் சிறிது நேரம் செலவழித்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, நீண்ட கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். கடைகளில் வாங்கும் மாவு பாக்கெட்டுகளை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.