fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை….! காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை…..!

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் பலரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை பொறுத்தவரையில் தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து அமைச்சராக பொறுப்பேற்று நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்த பலர் வழக்கை திரும்ப பெற்றதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியதால் உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர். முடிவில் அவரை அமலாக்கப்படுகிறார்கள். கைது செய்தனர்.

அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் மருத்துவமனையில் இருந்தபடியே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அதற்கான உத்தரவை நீதிமன்றமும் வெளியிட்டது. மேலும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் வந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்தார்.

இந்த நிலையில் தான் அறுவை சிகிச்சை முடிவடைந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் உடல்நிலை தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது செந்தில் பாலாஜியால் மெதுவாக பேச முடிகிறது. ஆனால் என்னும் எழுந்து இயல்பாக நடமாட முடியவில்லை. செந்தில் பாலாஜி தனி அறையில் 20 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவரது தம்பி அசோக் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவரை சென்று சந்திக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறது காவிரி மருத்துவமனை நிர்வாகம்.

Next Post

கிடுகிடுவென உயர்ந்த தக்காளியின் விலை…..! புலம்பித் தள்ளும் இல்லத்தரசிகள்…..!

Mon Jun 26 , 2023
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான காய்கறிகளின் விலை அவ்வப்போது உயர்வதும் பின்னர் குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். ஒரு கிலோ பீன்ஸின் விலை 120 ரூபாயாகவும், ஒரு கிலோ இஞ்சிியின் விலை 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அத்யாவசிய காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல […]

You May Like