fbpx

தினமும் ஒரு பல் பூண்டினை பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலில் என்ன நடக்கும்.!

நாடுகள் மற்றும் கலாச்சார வேறுபாடு இன்றி அனைத்து சமையலறைகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப்பொருள் பூண்டு. இது உணவின் சுவையை கூட்டுவதோடு பல்வேறு விதமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. இந்த பூண்டினை சமைத்து உண்ணாமல் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி. இது வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தினமும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் உடலை விட்டு நீங்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய அமிலங்கள் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன. இது இன்சுலின் சுரப்பதை தூண்டி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

பூண்டில் அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. இது தொண்டையில் ஏற்படும் கரகரப்பை போக்குகிறது. மேலும் பூண்டில் உள்ள சாறு பட்டாலே பல் வலி பறந்து போய்விடும். இது வாயு தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறில் இருந்தும் நமது உடலை பாதுகாக்கிறது. இதன் நோய் எதிர்ப்பு சக்தி உடலை எந்த நோய்களும் அண்ட விடாமல் தடுக்கிறது.

தினமும் பச்சை பூண்டு ஒரு பல் சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கக்கூடிய புழுக்கள் வெளியேறுவதோடு செரிமான மண்டலமும் சீராக்கப்படுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை நுரையீரலில் படிந்திருக்கும் சளியை அகற்ற உதவுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் வீரிய தன்மை காரணமாக ரத்தக்குழாய்களில் இருக்கும் கொழுப்புக்களும் வெளியேற்றப்படுகின்றன.

Kathir

Next Post

உடல் எடையை குறைக்க உதவும் முருங்கைக்கீரை! முருங்கைக்கீரையில் குவிந்துக்கிடக்கும் நன்மைகள்!

Fri Nov 17 , 2023
முருங்கைக் கீரை நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குவதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த முருங்கைக் கீரையை சாறாக குடிப்பதன் மூலமும் சமைத்து உண்பதன் மூலமும் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அதோடு பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. முருங்கைக் கீரையில் கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீசியம் மற்றும் தாமிரம் […]

You May Like