கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், வரும் மே மாதத்துக்கான அதிகபட்ச வெப்பநிலை கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சாதாரண குறைந்தபட்ச வெப்பநிலை நிலவும். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, கங்கை மேற்கு வங்காளம், கிழக்கு உத்தரப் பிரதேசம், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் வடக்கு சத்தீஸ்கரின் சில பகுதிகள், கிழக்கு மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கடலோர குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் மே மாதம் நாடு முழுவதும் சராசரியாகப் பெய்யும் மழை பெரும்பாலும் இயல்பானதாக இருக்கும். வடமேற்கு இந்தியாவிலும், மேற்கு-மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும் மற்றும் தீபகற்ப இந்தியாவின் வடக்குப் பகுதியிலும் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு-மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும் மற்றும் தென் தீபகற்ப இந்தியாவிலும் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.