fbpx

அடுத்த 3 நாட்களுக்கு இந்த 4 மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை…

அடுத்த 3 நாட்களுக்கு மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது..

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதனால் வடமேற்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தின் பகுதிகளில் இயல்பான வெப்பநிலைக்குக் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த 3 – 4 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 17 வரையிலும், வட கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவில் ஏப்ரல் 15 வரையிலும், பீகாரில் ஏப்ரல் 15 முதல் 17 வரையிலும் வெப்ப அலை இருக்கும். மேற்கு இமயமலைப் பகுதி மற்றும் வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது..

இந்திய வானிலை மைய விஞ்ஞானி நரேஷ் குமார் இதுகுறித்து பேசிய போது ” இப்போது, வெப்பநிலை சாதாரணமாக உள்ளது, ஆனால் வறண்ட நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெப்பம் அதிகரிக்கும்.. ஒரு வாரத்திற்குப் பிறகு வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை உருவாகலாம்” என்று தெரிவித்தார்.

பொதுவாக சமவெளிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் குறைந்தது 30 டிகிரி செல்சியஸை வெப்பநிலை அடைந்தால் வெப்ப அலை என்று கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Maha

Next Post

உபி: கொடூரத்தின் உச்சம்.... காணாமல் போன 2 வயது குழந்தை! அழுகிய நிலையில் லாப்டாப் பேக்கில் சடலமாக மீட்பு!

Thu Apr 13 , 2023
உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இரண்டு வயது சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் லேப்டாப் பேக்கிலிருந்து எடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சார்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி மஞ்சு இந்த தம்பதியினருக்கு மான்சி என்ற இரண்டு வயது பெண் குழந்தை இறந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகுமார் மற்றும் மஞ்சு […]

You May Like