fbpx

மின்சார வாகனம் வைத்திருக்கும் நபர்கள்… அல்லது வாங்க போறீங்களா…? அப்ப இதை தெரிஞ்சிகோங்க…! மத்திய அரசு தகவல்

பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம்  நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்சார வாகனத் தொழில் முழுமையான வளர்ச்சி அடையும் வகையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல்  நிலையங்களுக்கு  ஃபேம் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 மின் திறனேற்றல் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல்  நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 இல் ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியது. தற்போது, ஃபேம் India திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Also Read: வாகன ஓட்டிகளே கவனம்… நாளை ஒரு நாள் மட்டும் தான்…! மீறி சென்றால் சிக்கல்…! போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Vignesh

Next Post

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்..

Wed Jul 27 , 2022
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. வடக்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.. அந்நாட்டின் நேரப்படி காலை 8:43 மணிக்கு லூசோன் பிரதான தீவில் […]

You May Like