தமிழ்நாட்டில் ஏப்ரல் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்து வரும் நிலையில், இந்த கனமழை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.