fbpx

தமிழ்நாட்டிற்கு கனமழை அலர்ட்..!! டிசம்பர் 30இல் மீண்டும் சம்பவம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை மற்றும் காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, டிசம்பர் 26, 27, 28, 29, 31 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! நாளை (டிச.27) இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Tue Dec 26 , 2023
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை (புதன்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் 6 மணி […]

You May Like