fbpx

இன்றும் நாளையும் கனமழை கொட்டி தீர்க்கப் போகுது.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வட தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, கடலூர், விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌ மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 10 முதல் 12-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், தெற்கு வங்கக்கடல், கர்நாடக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 12ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

புதுமண தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறு: குத்துவிளக்கால் மனைவியின் தலையைப் பிளந்த கணவர்...!

Thu Sep 8 , 2022
கேரள மாநிலம் ஆலப்புழா, கிடங்கம்பரம்பு பகுதியில் வசிப்பவர் நிகிதா( 25). நிகிதா ஏற்கனவே கல்யாணமாகி முறைப்படி விவாகரத்து பெற்றவர். இவருக்கும் வர்க்கலாவில் வசிக்கும் அனீஷ் (35) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் கல்யாணம் நடந்தது. சமீபத்தில் இருவரும் சார்ஜா சென்று விட்டு திரும்பியுள்ளனர். அனீஷுக்கு சில உடல் நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் இருவரும் கல்யாணம் முடிந்த உடனேயே வெளிநாடு சென்று வீடு திரும்பினர். ஆனால் போன இடத்தில் […]

You May Like